Tamil Poem: பணமும் மனிதமும்!
Jul 16, 2026,04:04 PM IST
- பாரத்
உழைப்பவன் கையில்
சில்லறை மட்டும்
உழவர்கள் மீது
கடன் சுமை ஏற்றம்
பெண்கள் பிரசவம்
வியாபாரம் ஆகும்
கோவில் நுழைவாயிலோ
யாசகர்கள் கூட்டம்
கற்பைப் பறித்தவன்
சிறைச்சாலை
விருந்தாளி
கற்கள் உடைப்பவன்
ஆயுள் கைதி வறுமை நில போராளி
கடவுளை
கருவறை முன்
காண கட்டணம்
ஏழையும் வரிசையில்
மட்டுமே நிற்கணும்
பட்டதாரி இளைஞர்களுக்கு
இல்லை
காலியிடப் பணியும்
அரசியல் சாணக்கியர்களுக்கு காவல்துறை
காலடி பணியும்
மாதச் சந்தா
குடியிருப்பில்
உழைக்கும் வர்க்கமே
இவைகளுக்கு மூலாதாரம்
காகித ரொக்கமே