பெரியாராக கொந்தளிக்கும் எனது தேகத்தின் வேகம்!

Su.tha Arivalagan
Jul 09, 2026,03:49 PM IST

- பாரத்


சாதி மத சச்சரவுகளை கண்டு 

பெரியாராக கொந்தளிக்கும்

எனது தேகத்தின் வேகம்


பெண்ணுரிமை மீட்க கோரி 

பாரதியாராக குரல் கொடுப்பேன் 

என்றென்றும் நானும்


ஆணவப் படுகொலையை 

சட்டத்தின் முன் நிறுத்தி 

தண்டிக்க வேணும் 




பெண்களை சீண்டுபவனின்

பதினொரு விரல்களையும்

துண்டிக்க உத்தரவிடணும் 


கோயில் தடாகங்கள் தான்

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் 

நிறைந்திருக்கு 


மேலும்


பள்ளிக்கூடத்திலும் சாதி சான்றிதழே

ஏழை எளியவர்க்கென்று 

எழுதி இருக்கு போலும்