யார் மனிதன்?
Jul 19, 2026,10:11 AM IST
- பாரத்
பட்டாடை உடுத்தி
பகல் கொள்ளை
அடிப்பவனா ?
தன் உடலை வருத்தி
வெயில் மழையில் உழைப்பவனா ?
பொதுக் கூட்டம் கூட்டி
மேடை நின்று நடிப்பவனா ?
ஏழை எளியவர்
கண்ணீரை
துணை நின்று
துடைப்பவனா?
உயர் கல்வியினை
எளியோருக்கு
காந்தி நோட்டிற்கு
விற்பவனா ?
உயிர் தியாகம் செய்ய நாட்டுக்காக
உறைப்பனியிலும்
எல்லையில் நிற்பவனா?
பெண்ணுரிமை மீட்க
பாரதியாரை எழுபவனா?
பெண்ணுடல்
ஆடையினை
காம பார்வையிலே
எரிப்பவனா?
அரசு அதிகாரத்தில்
இருந்தும்
சட்டக் கடமைகளை
மறந்தவனா?
அன்றாடங் காட்சிகளாக
பொதுவுடமை கேட்டு
போராட்டக் களத்தில் நிற்பவனா?