வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கனேசன்!

Su.tha Arivalagan
Oct 01, 2026,11:21 AM IST

- பாரதிராஜன்


நடிகர் திலகம் என அறியப்படும் சிவாஜி கணேசன் அக்டோபர் 1ம் தேதி 1928ல் பிறந்தார். 250படங்களுக்கு மேல் நடித்தார். மராட்டிய மன்னர் சிவாஜி வேடத்தில் நடித்த காரணத்தால் சிவாஜி என அழைக்கப்பட்டு சிவாஜி கணேசன் ஆனார். 


நவராத்திரியில் 9 விதமான வித்தியாசமான வேடங்கள். திருவிளையாடலில் தருமி &நக்கீரனுடன் போட்டி, சரஸ்வதி சபதத்தில் நாரதர் &ஊமையன் வேடம். எங்கிருந்தோ வந்தாள் பைத்தியகாரன் வேடம். பாடலே இல்லாத படத்தில் நடித்தது. எங்க ஊர்ராஜா, கட்டபொம்மன், ராஜா, நீதி, தங்கை, திருடன், பட்டிக்காடாபட்டணமா, ப வரிசை திரைப்பட வெள்ளி விழா நடிகர், பலே பாண்டியா மறக்க முடியுமா? குலமகள் ராதை சர்க்கஸ் வீரன், குருதட்சிணை இன்னும் இன்னும். 


எகிப்தில் முதல் முறையாக சிறந்த நடிகர் விருது, 1997ல் தாதாசாகேப் விருது. 1976ல் மொரிஷியஸ் நாட்டுக்கு அப்போதைய பிரதமர் ராம்கூலம் அழைப்பின் பெயரில் அந்த நாட்டு சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட நடிகர். 1995ல் அமெரிக்க சென்ற போது அந்த நாட்டில் கொலம்பஸ் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டு சிவாஜி அதனுடைய கெளரவத் தலைவரானார்


இவரை நான் எப்போது சந்தித்தேன். நான் காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்த போது கல்லூரி யூனியன் பொறுப்பில் இருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால் சென்னைக்கு சென்று  கல்லூரி கூட்டத்தில் பேச கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், குமரி அனந்தன், சிவாஜி இவர்களுடைய தேதி வாங்கி வந்து அதை கல்லூரி யில் கொடுத்து அதன் மூலமாக சிவாஜி அவர்களை 1971முதல் 1974வரை நிறைய முறை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. 




மேலும் அந்தமான் காதலி படத்தில் நடித்த போது முதல் காட்சியில் வரும் வீடு எங்களுக்கு தெரிந்தவர் வீடு. அந்த படத்திற்கு பிறகு இன்னும் நெருக்கம் அதிகமாகியது. 


பிரான்ஸ் நாட்டின் செவாலியே பட்டம் பெற்றவர் சிவாஜி அதனாலேயே அவர் வசித்த தெருவிற்கு செவாலியே சிவாஜி கனேசன் தெரு என பெயரிடப்பட்டது. மறக்க முடியாத நடிகர் என்றால் அது சிவாஜி தான். என் சகோதரி ஒருவர் சிவாஜி நடித்த படம் வெளியான உடனேயே முதல் காட்சி பார்த்து விடுவார். நானும் அப்படியேதான்.


தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் சிவாஜி கணேசன். அவரது கம்பீர முழக்கத்தாலும், சிங்கக் குரலாலும் திரையரங்கத் திரைகள் அனைத்தும் பெருமை கொண்டன, கெளரவம் கண்டன என்றால் மிகையில்லை.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)