சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
- பாரதிராஜன்
விமான பயணம் என்பது எப்பவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சிலருக்குஅமைகிறது. ஆம்.2024ல் நானும் என் மனைவியும் சென்னையில் இருந்து பாஸ்டனுக்கு விமானம் மூலமாக முதலில் துபாய் பிறகு துபாயிலிருந்து பாஸ்டன். அக்டோபர் 2024 திரும்ப சென்னைக்கு வந்தோம். அதன் பிறகு அமெரிக்கா செல்ல முடியாத நிலை.
2025ஜூலை முதல் 2026வரை மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மியாட் மருத்துவமனை வாசம். டயபடிக் டைப் 2வால் பாதிக்கப்பட்ட என்மனைவிக்கு இடது காலில் முதலில் ஆஞ்சியோ பிளாஸ்டி, பிறகு இடதுகால் கட்டைவிரல், அடுத்த விரல், லோ சுகர் ஏகப்பட்ட பிரச்சினை.
கடைசியாக 12/1/26 நாற்காலியில் இருந்துஎழ அப்படியே கீழே உட்கார இடுப்பு பிராக்சர். ஆனால் லோ சுகர் சமயத்தில் இருதயம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஞ்சியோ மூலமாக 3பிளாக் எனகண்டறிந்து இருதய பைபாஸ்.அது முடிந்து போஸ்ட் சர்ஜரி சரியாகாமல் 19/3/26என்மனைவி காலமானார்.
அவரின் கண்கள் சங்கர நேத்ராலயாவிற்கு அளிக்கப்பட்டது. பிறகு நான்மட்டும் சென்னையில் இருந்து பாஸ்டன் விமானம் மூலமாக பயணம். ஆகஸ்ட் 31 பாஸ்டனில் விமானம் ஏறியவுடன் எனக்கு சாப்பாடு வெஜிட்டேரியன் என்ற தகவல் சொல்ல சென்ற போது அங்கே இருந்த ஏர்ஹோஸ்டஸ், சார் எனக்கு தெரியும், மேடம் எங்கே என்றார் என்ன என்ன, என்ற என்னிடம் போன தரம் உங்களுடைய சீட் அட்ஜஸ்மெண்ட் செய்தது நான். அப்ப நீங்க டீஷர்ட் போட்டு வந்தீங்க என்றார்.
எனக்கு பயங்கர ஷாக். 2024ல் நான் பயணம் செய்தது வேற விமானம். இப்போது வேற விமானம். அதுவும் இரண்டு வருடங்கள் கழித்து பயங்கர ஞாபகசக்தி உனக்கு என்று அதன்பிறகு மனைவி காலமான விவரம் சொல்ல போட்டோ காண்பித்தேன்.
சாரி அங்கிள் என்றபடியே அபுதாபி வரை நல்ல படியாக கவனித்தார். என்னால் மறக்க முடியாத விஷயம்.
மனிதம் இன்னும் உயிர்த்தே இருக்கிறது.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)