தில்லாலங்கடி!

Su.tha Arivalagan
May 16, 2026,03:36 PM IST

- பாரதிராஜன்


கோவிந்தசாமி ஓருவிவசாயி. அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி, அவர் மனைவி  கமலா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். நாட்டு நடப்பு இருவருக்கும் ஒரளவு தெரியும். 


ஒரே மகன் சீனிவாசன் கல்லூரி மாணவன். விவசாயம் நொடித்துப் போனதால் கிராமத்தில் இருந்து சென்னையிலுள்ள புறநகர் பகுதியில் தங்கி, மாற்றி யோசித்து சீசனுக்கேற்றபடி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார் கோவிந்தசாமி.


இளநீர் தள்ளு வண்டிகளில்  வைத்து வியாபாரம் செய்து வந்தார். பேடிஎம் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்ய எண்ணி மகனிடம் பேச, மகன் அப்பா அதில் நீ உஷாராக இருக்க வேண்டும் என்ற தெரிவித்தான். க்யூஆர் கோடு  மூலமாக நிறைய தில்லு முல்லு நடக்கின்றது என்று சொல்லி விட்டு அப்பாவை எச்சரித்தான். 

 

மறுநாள் கல்லூரியில் இருந்து நேராக அப்பா வியாபாரம் செய்யும் இடத்தைப் பார்த்தான். சில பேர் ரொக்கமாக பணம் கொடுக்க சிலர் பேடிஎம் மூலமாக பணம் அனுப்பினார்கள். 


காரில் வந்த ஒருவன் அவசர அவசரமாக 10இளநீர் வாங்கி பேடிஎம் மூலமாக அனுப்பகிறேன் என்ற படியே ஸ்கேன் செய்து விட்டு கிளம்ப, சீனிவாசன் சார் பணம் வந்த பிறகு கிளம்புங்க என்று சொல்ல, அவன் பிடிவாதமாக கிளம்ப, மகன் அந்த நபர் கையிலிருந்த மொபைலைப் பிடுங்கிப் பார்த்தான்.




அப்போது அதில் மொபைல் இல்லை, ஏமாற்ற நினைத்தவனை எல்லோரும் நைய புடைத்து, அதற்குள் ஒருவன் காவல்துறைக்கு தகவல் சொன்னான்.


காவலர்கள் வந்து அவனைப் பார்க்க, அடப்பாவி இவன் பயங்கர கேடி, காவல்துறை இவனைத் தேடிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய செய்கையால் உங்களுக்கு ரிவார்ட்கிடைக்கும் என்றார்.


இதுதான் தில்லாங்கடி!


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)