Short and Cute story: தோசை பால்!

Su.tha Arivalagan
Aug 11, 2026,10:35 AM IST

- பாரதிராஜன்


சுமாராக 50 ஆண்டுகளுக்கு முன்  எங்களுடைய சிறிய வயதில் என் பாட்டி எங்களுக்கு ஒரு பெரிய இரும்பு க்கரண்டியில் தோசை மாவு ஊற்றி அடுப்பில் சுட வைத்து தோசை திருப்பியால் திருப்பி வெந்ததும் கொடுப்பார். அதன் பெயர் தோசை ஊத்தப்பம், மெது மெது என்றிருக்கும். 


தோசையை தோசைக்கல்லில் போட்டு எடுப்பதை விட தோசை ஊத்தப்பம் நிறைய வேலை வாங்கும், அதுவும் விறகு அடுப்பில் அப்போதெல்லாம் மண்எண்ணெய் கிடைக்காத காலம் .


நான் இப்போது அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் மகள் வீட்டில் வாசம். என் மகள், அவளின் குழந்தைக்கு 3 1/2

வயது ,குழிப்பணியாரம் தட்டில் தோசை மாவு ஊற்றி அதனை தருகிறாள் சாப்பிட. அதற்கு என் பேத்தி வைத்த பெயர் தோசை பால்.




அவள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறாள். என்னிடம் ஐ லைக் தோசை பால் என்று கூறவே, எனக்குப் புரியவில்லை. அதன் பிறகு என் மகள் சொன்ன பிறகே தெரிந்தது. கரண்டி ஊத்தப்பம் தான் தோசை பால் என்று  ஹஹஹஹஹ!


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)