கண்தானம்!
- பாரதிராஜன்
காலையில் செய்தித்தாள் பார்த்தால் காலமானார் பகுதியில் இறந்தவரின் கண்கள் தானம் பற்றிய செய்தி சமீப காலமாக வெளியாகிறது. இதுதவிர விபத்தில் அடிபட்டு,அதன் மூலமாக மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.
பலநூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திண்ணன் என்பவரின் கதை. வேடர் குலத்தில் பிறந்தவர். இன்றைய ஆந்திர மாநிலத்தில் அருகிலுள்ள திருக்காளத்தி என்ற இடமிருகில் வசிப்பவர். தொழில் வேட்டையாடுதல். திண்ணன் வேட்டைக்குச் சென்றபோது திருக்காளத்தி மலையில் வாயுலிங்கத்தைக் கண்டார்.
சிவனின் மீது அளவற்ற அன்பு கொண்டு, ஆகம விதி தெரியாத திண்ணன் தன் வாயில் சுவர்ணமுகி ஆற்றுநீரை சுமந்து வந்து அபிஷேகம் செய்தார்.தலையில் சொருகி வந்த மலர்களால் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்து நைவேத்யம் செய்தார்.
இதைப்பார்த்த சிவகோசரியார் என்ற பூசாரி மனம் வருந்தினார். கண்ணப்பரின் அன்பை சிவாச்சாரியாருக்குக் காட்ட சிவன் திருவிளையாடல் நிகழ்த்த எண்ணி லிங்கத்தின் வலதுகண்ணில் இருந்து குருதி வழியச்செய்து அதைப்பார்த்து திண்ணன் பச்சிலை கண் மேல் வைத்தும் நிற்காததால் தன் வலக்கண்ணை எடுத்து வைத்தார்.
உடனே இடது கண்ணில் குருதி வழிய, இடதுகண்ணை எடுத்தால் இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்து தன்காலை அடையாளமாக இடது கண்ணில்அடையாளமாக வைத்தார். இடக்கண்ணை தோண்ட முயலும் போது, நில்லு கண்ணப்பா என மும்முறை க்கூறி அவருக்கு கண்பார்வை கொடுத்தார்.
அன்று முதல் திண்ணன் கண்ணப்பன் ஆனார். முதல் கண்தானம் செய்தவர் கண்ணப்பன் தான். நாம் அவரைப் பின்பற்றுகிறோம் அவ்வளவே. என் வீட்டிலும் மூன்று மகளிர்கண்தானம் செய்திருக்கின்றனர்.
18/04/2008 என் சகோதரி உடல்நலக்குறைவால் காலமானபோது. என்சகோதரி கண்தானம் எனக்கு சொல்ல வேண்டாம் என்றபோது என்மனைவி நானும் என் கணவரும் கண்தானம் செய்ய முடிவுசெய்து திருமணம் முடிந்ததும் விண்ணப்பம் சங்கர்நேத்ராலயாவில் கொடுத்துவிட்டோம் என்றாள்.
இரண்டாவது என் அம்மாவின் தங்கையின் கண்கள்20/05/2018 தானம் வழங்கப்பட்டது. 19/03/2026 என் மனைவியின் கண்கள் நீரிழவு நோயால் காலமானார். அவரின்கண்கள் வழங்கப்பட்டது. மூன்று மகளிரும் சுமங்கலிகள்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)