தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!

Su.tha Arivalagan
Oct 18, 2026,03:25 PM IST

- பாரதிராஜன்


தேனிசைத் தென்றல், கானா பாடல்களை தெருவிலிருந்து திரைக்கு கொண்டு வந்த இசை மேதை தேவா அவர்கள் அக்டோபர் 17 அன்று சென்னை சூர்யா மருத்துவமனையில் தனது 75-வது வயதில் காலமானார். 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அந்த கானாவின் சக்கரவர்த்திக்கு கண்ணீர் அஞ்சலி. 


தேவா அவர்களுக்கு அஞ்சலிக் கவிதை


தெருவோர கானாவை தேனாக்கியவனே!

மைலாப்பூரில் பிறந்து தமிழகத்தை ஆண்டவனே!


வெள்ளை வேட்டி சட்டையில் வந்த வசந்தமே!

உன் வெள்ளை செருப்பில் கூட இசை வைத்தவனே!


அண்ணாமலையில் ஒலித்தது உன் முரசு,

பாட்ஷாவில் அதிர்ந்தது உன் இசை அரசு!

ஆட்டோக்காரன் பாட்டில் ஆட்டம் போட்டோம்,

ஆசை படத்தில் உருகிப் போனோம்!




வைகாசி பொறந்தாச்சு என்று நீ சொன்னாய்,

வசந்தம் பொறக்க வைத்தாய்!

காதல் கோட்டையில் காதல் சொன்னாய்,

குஷியில் எங்களை குதிக்க வைத்தாய்!


தேனிசைத் தென்றல் என்பது பெயரல்ல,

அது தான் நீ வாழ்ந்த வாழ்க்கை!


இசைப்பெட்டி மூடிக்கொண்டது,

ஆனால் நீ தந்த ராகங்கள் மூடவில்லை!7

உடல் தான் மறைந்தது தேவா,

உன் பாடல் என்றும் மறையாது!


போய் வா இசை தேவனே... உன் பாடல்கள் உள்ளவரை நீ இருப்பாய்!


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)