Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!
- பாரதிராஜன்
லைட்ஹவுஸ் பற்றிய என் எண்ணம்
1967ல் சிங்கார சென்னைக்கு வந்தேன். செங்கை மாவட்டத்திலுள்ள வாலாஜாபாத் டவுனில் இருந்த வா.தி.மாசிலாமணி முதலியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு முடிந்த நிலையில் மயிலை பி.எஸ். உயர்நிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு சேர்ந்தேன். பள்ளிக்கு எதிரில் உள்ள வைத்தியர் அண்ணாமலைத்தெருவில் வாசம். இந்த கட்டுரை பள்ளிக்கூடம் பற்றி அல்ல. லைட்ஹவுஸ் குறித்தது.
எம்ஜிஆர், சரோஜதேவி நடித்த கலங்கரை விளக்கம் சினிமாவில் பார்த்தது தான் லைட்ஹவுஸ். ஞாயிறு வந்தால் போதும் நான், என்குடும்பத்தினருடன் சாந்தோம் கடற்கரையில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை. அதன் பிறகு வீட்டுக்கு வருவது.
சில வார ஞாயிறுகளில் டவுனில் இருந்து மாமா குடும்பம் சேர்ந்து சாந்தோம் பீச். அப்போது எல்லாம் நெடிதுயர்ந்து நிற்கும் லைட் ஹவுஸை மிட்டாய்க்கடையை முறைத்துப் பார்க்கும் அப்பாவி மனிதர்களைப் போலப் பார்ப்பேன். மேலே ஏறிப் பார்க்கலாமா என்ற எண்ணாத நாளில்லை. ஆனால் கேட்டதில்லை.
அந்த எண்ணம் 28/04/26 அன்று இளவல் மூலமாக நிறைவேறியது. ஆம் கோடம்பாக்கத்தில் இருந்து கால் டாக்ஸி மூலமாக சென்று, லைட்ஹவுஸ் மேலே ஏறிப்பார்த்தது பெரிதல்ல. மியூசியத்தில் போட்டோ எடுக்க தடை. ஜிபிஎஸ் இல்லாத காலத்தில் நிலை எல்லாம் பார்த்தது பிரமிக்க வைத்தது என்றால் மிகையல்ல.
லைட்ஹவுஸ் வார விடுமுறை செவ்வாய். லைட் ஹவுஸ் பார்க்க கட்டணம் அங்கே நேராகப் போய் வாங்கிக் கொள்ளலாம்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)