நிரம்பி வழியும் பவானிசாகர் அணை.. பார்க்கவே படு ஜோரா இருக்கு!
- ஸ்வர்ணலட்சுமி
பவானி சாகர் அணை நிரம்பி வழிகிறது. பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது அந்த அணை.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பவானி ஆறு அங்குள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைக்காக 1955இல் கட்டிய பவானிசாகர் அணை சுமார் 7 கிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும்.
இந்த அணை முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்டது ஆகும். 15 அடி உயரம் 1621.5 சதுரமைல் பரப்பளவு கொண்ட பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மிகப்பெரிய மண்ணால் கட்டப்பட்ட அணை என்கிற புகழ் பவானிசாகர் அணைக்கு உண்டு.
"அணை இன்றி முற்றுப் பெறாது நீரின் அழகு" என்கிற கூற்று உண்டு தமிழகத்தில் பல அணைகள் உள்ளன, ஆனால் காலை வெயில் நேரத்தில் சூரியனின் பிரதிபலிப்பால் நீர் ஆரஞ்சு நிறமாகவும் ,ஓயாமல் பாயும் அலையின் காரணமாக எழும் நுரை வெள்ளை நிறத்திலும் பாசனத்தின் காரணமாக நீர் பச்சை நிறத்திலும் இருந்து நம் நாட்டின் மூவர்ண கொடியின் நிறத்தை காட்டுகிறது இந்த ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை.
சத்தியமங்கலத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறும் மாயாறும் ஒன்று கூடும் இடத்தில் உள்ளது. பவானிசாகர் அணை 1948 இல் பத்து கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது, என்றும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டனர் என்றும் கூறுவார்கள்.
பவானிசாகர் அணையின் கட்டுமான பணி ஏழு ஆண்டுகளில் நிறைவு பெற்றது, கர்மவீரர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது 1955 ஆகஸ்ட் 19ஆம் தேதி பவானிசாகர் அணை திறக்கப்பட்டது. இது கீழ் பவானி அணை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. எம்.ஹெச்பிஹெச் (MHPH)நுண் புனல் மின் நிலையத்தில் 8 மெகாவாட் திறனிலும் வலது கரை வாய்க்கால் மின்னிலயத்தில் 8 மெகாவாட் திறனிலும் என மொத்தம் 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
டனாய்கண் கோட்டை அதாவது தண்டநாயக்கன் கோட்டை என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஒர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கியுள்ளது . கோடை காலங்களில் அணையின் நீர் வற்றிய பிறகு அந்த கோட்டையை காண இயலும். பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் இந்த கோட்டை உள்ளது. அணையின் முன்பு அழகான தோட்டம் உள்ளது. இதில் குழந்தைகள் விளையாடும் பகுதி, ரயில் சவாரி ஊஞ்சல் மற்றும் கொலம்பஸ் சவாரி ஆகியவை உள்ளன.
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொறியியல் இயற்கையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டு களிக்க வேண்டிய முக்கியமான அணை இந்த பவானிசாகர் அணையாகும். பவானிசாகர் அணை நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆற்றுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வரும் மோயாறு கலக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணையை அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு இடமாகும் .பருவ மழை காலங்களில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.
70 ஆண்டுகள் நிறைவு பெற்று 71 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த பவானிசாகர் அணை அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு இடமாகும். வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் தவறு விடாதீர்கள் . மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.