தேசத் தந்தை காந்தியும்.. கருப்பு காந்தி கர்மவீரர் காமராஜரும்!
- இரத்னா செந்தில்குமார், திருவண்ணாமலை
தேசத்தின் தந்தை அவர் வாழ்ந்த வாழ்க்கையோ விந்தை
அரையாடை அணிந்த மனிதர் வறுமையை உணர்ந்த மாமனிதர்
கைத்தடி கொண்டு நடப்பார் சத்தியத்தை போதிப்பார்
அகிம்சையை கடைப்பிடித்தார் அண்ணல் காந்தி என்ற பெயர் எடுத்தார்
ரூபாய் நோட்டுகளில் சிரிப்பார்
நாட்டைக் காத்த வள்ளலாக போற்றப்படுவார்
சத்திய சோதனை இவர் உண்மையை எழுதிய சாதனை
கதர் ஆடை உடுத்துவார் கைத்தறிக்கு மதிப்பு தருவார்
எளிமையானவர் நேர்மையானவர் வழக்கறிஞராக வாதாடியவர்
அண்ணல் காந்தி தேசத்தின் தந்தை காந்தி தாத்தா
பிறந்தநாளில் வணங்குவோம் அவர் காட்டிய சத்திய வழியில் நடப்போம்
ஏனென்றால் சத்தியம் ஒருபோதும் தோற்காது என்பதால்.....
கர்மவீரர் காமராசர்
எளிமையின் உருவம் கல்விக்கண் திறந்த தெய்வம்
ஊர் தோறும் பள்ளிகள் திறந்தார் மாவட்டம் தோறும் கல்லூரி திறந்தார்
கல்வியே முக்கியம் என்பதை உணர செய்தார் இலவச கல்வியை தந்து பெருமை கொண்டார்
அணைகள் பல கட்டினார் எங்கள் சாத்தனூர் அணையும் அவர்தான் கட்டினார்
எங்களுக்கெல்லாம் தண்ணீர் பஞ்சத்தை இல்லாமல் செய்தார்
அவருக்குப் பின் யாரும் அணை கட்டவில்லை
அவருக்குப் பின் யாரும் நேர்மையான அரசியல்வாதியாக வரவில்லை
எத்தனை எத்தனை தொழிற்சாலைகள் அத்தனையும் அவர் கட்டிய வேலை வாய்ப்புகள்
தன் வீட்டிற்கும் வரி கட்டியவர் இன்றும் தனித்து தெரிபவர்
அதிகம் படிக்காதவர் ஆனால் படித்தவர்களுடைய பண்பை பெற்றவர்
ஏழை பணக்காரரை பேதம் பார்க்கத் தெரிந்தவர்
ஏழை மக்களுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்
எத்தனையோ வெற்றிகளை பெற்றவர்
கடைசியில் அதே மக்களால் தேர்தலில் தோற்றவர்
தோற்றது அவர் தேர்தலில் மட்டும்தான் என்றும் வாழ்கிறார் மக்கள் மனதில்
வெற்றி யாருக்கு அது காமராசருக்கு
கருப்பு காந்தியே
கர்மவீரரே
தென்னாட்டு சிங்கமே
உன் நினைவு நாளில் வணங்குகிறோம்
நீ கொடுத்த கல்வியை நாங்கள் படித்தோம் என்ற நன்றியுடன்....!