Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

Su.tha Arivalagan
Nov 06, 2025,11:42 AM IST

- ஷீலா ராஜன்


பாட்னா: பீகார் சட்டசபைக் களத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முக்கியமான வேட்பாளர்களில் ஒருவராக மைதிலி தாக்கூரும் இடம் பெற்றுள்ளார்.


இளைஞர்களின் கையில் இந்தியாவை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பிய விவேகானந்தரின் விருப்பத்திற்கு இணங்க 25 வயதான இளம் பெண் பீஹார் தேர்தலில் போட்டியிடுகிறார் மதுபனி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த மைதிலி தாக்கூர். பாஜக சார்பில் இவர் தேர்தலில் களம் கண்டுள்ளார். 


சமூக வலைதளம் மூலமாக பிரபலமானவர் மைதிலி தாக்கூர். யூடியூப், இன்ஸ்டாகிராம் என இவர் எல்லா ஏரியாவிலும் பிசியாக இருக்கக் கூடியவர். ..இவரது instagram பக்கத்தினை ஆறு மில்லியன் பேரும், யூடியூப் சேனலினை ஐந்து புள்ளி ஏழு மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருவதே இவரின் திறமைக்கு சான்று பகர்வதாக உள்ளது. 




அக்டோபர் மாதம் பாஜகவில் சேர்ந்த இவர், பீகார் தேர்தலில் போட்டியிடுவது இன்றைய தலைப்புச் செய்திகளில் முக்கியமான செய்தியாக இடம் பிடித்துள்ளது.


இந்த இளம் பெண்ணின் வெற்றி இவரை போன்ற இளம் பெண்களை அரசியலில் பங்கெடுக்க வைக்குமா என்பது பீகார் தேர்தலின் முடிவில் தான் தெரியும். சிறு வயது முதலே பல மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடும் நாட்டுப்புற இசையோடும் கலந்து பாடி இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் மைதிலி. எந்த அரசியல் பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர்.. இவரின் தாயும் தந்தையும் இசைக்கலைஞர்கள். மிக மிக சாமானிய குடும்பப் பின்னணி


இவரின் அரசியல் ஆர்வம் வியப்பளிப்பதாக அவருடைய பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மைதிலி தனது பிரச்சாரத்தின்போது, நானும் விடுமுறைக்கு வெளியே செல்ல விரும்பவில்லை; முதலில் என் தொகுதியில் மக்கள்-சேவை செய்வதே முக்கியம். அலினகர் தொகுதியின் மக்கள்-நலமும் வளர்ச்சியையும் முன்னெடுக்க என் முழு முயற்சியோடு செயல்படுவேன். தொகுதி பெயரை அலினகர் என்பதில் இருந்து சீதா நகர் என்று மாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.


நாட்டுப்புறப் பாடல்களை பாடியதன் மூலம் தங்களின் ஊர் பெண்ணை போல அவரை நினைப்பதாக அலினநகர் தொகுதியை சேர்ந்த பெண்கள் தெரிவிக்கின்றனர் ...தங்கள் வீட்டு பெண் போல அவர் வெற்றி பெற ஆசீர்வதிப்பதாக அத்தொகுதி பெண்கள் கூறுகின்றனர்.. 


அலினகர் தொகுதியில், மைதிலி தாக்கூர், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளரான வினோத் மிஸ்ராவின் போட்டியை எதிர்கொண்டுள்ளார். இது நிச்சயம் மைதிலுக்கு கடுமையான போட்டிதான். ஏனெனில் கடந்த இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதியில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியோ வென்றதில்லை.