கருவறை முதல் கல்லறை வரை!
- ஔவை அ.ர.தீபாரவி
இருட்டு
அறையில்
குறுகிக்
கிடந்தோம்
கிடந்த
மாதங்கள்
பத்தும்
பாதுகாப்பு
பாதுகாப்பை
உணர்ந்தோம்
ஒவ்வொரு
பருவத்திலும்
பருவங்கள்
மாறிட
வளர்ச்சியும்
வந்தது
வந்தது
வாழ்வில்
பொறுப்பும்
பிறந்தது
பிறவிப்
பெரும்பயன்
அடைதல்
இலக்கு
இலக்கைச்
சார்ந்தது
இனிய
பயணமே
பயணங்கள்
தொடரவே
பாதை
விரியுமே
விரியும்
விழிகளில்
பரவும்
வழிகள்
வழிகள்
கண்டிட
வலிகள்
தாங்கவே
தாங்கும்
நிலமே
தருமே
மகிழ்வே
மகிழ்வு
ஒன்றே
மனதின்
தேவையே
தேவைகள்
அனைத்தும்
தீர்க்கட்டும்
சேவைகள்
இறைவன்
இறைவன்
அருளால்
பெருகும்
வளமே!
(தமிழ் அருவி வழங்கும் அந்தாதிக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).