பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு
டில்லி : ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் ஆகியோரை தோற்கடிப்பதற்காகவே எஸ்ஐஆர்., வைத்து பல லட்சம் ஓட்டுக்களை திருடி பாஜக சதி செய்துள்ளது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
எஸ்ஐஆர்.,ஐ பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் சிலர் கூறிய விவகாரத்தால், சட்டமன்ற தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்பதால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தலைமை தேர்தல் கமிஷன் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் இதற்கு பாஜக தான் காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத், "எஸ்ஐஆர் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டுள்ளன. 2024ம் ஆண்ட லோக்சபா தேர்தலிலேயே மக்களின் மனநிலை மாற துவங்கி விட்டதையும், மாநில கட்சிகள் வளர துவங்கி விட்டதையும் பாஜக உணர்ந்து விட்டது. இதனால் தான் தன்னை எதிர்த்தவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களை தோற்கடிக்க சதி செய்தள்ளது. ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் தோல்வி அடைந்ததற்கு எஸ்ஐஆர் தான் காரணம். தேர்தலுக்கு முன் முதல்வர்களாக இருந்து பிரச்சாரம் செய்தவர்கள் அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டது எப்படி?
ஸ்டாலின் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டதால் அவர் 8000 ஓட்டு வித்தியாசத்திலும், மம்தா தொகுதியில் 50,000 ஓட்டுக்கள் நீக்கப்பட்டதால் அவர் 15,000 ஓட்டு வித்தியாசத்திலும் தோற்கடிக்கப்பட்டனர். இவர்களை போலவே கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் சாதி செய்தே தோற்றடிக்கப்பட்டுள்ளனர். பாஜக.,வை தீவிரமாக எதிர்த்ததால் தான் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். பாஜக., தீவிரமாக எதிர்த்த ஸ்டாலின், பினராயி விஜயன், ம்மதா ஆகியோர் அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பாஜக.,வை எதிர்த்தவர்கள் அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டது எதேச்சையாக நடந்தது அல்ல. பலம் வாய்ந்த மாநில கட்சிகளை அடுத்தடுத்து தோற்கடிப்பதே பாஜக.,வின் திட்டமாக இருந்தது என அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.