புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பியது யார்.. போலீஸ் விசாரணை

Su.tha Arivalagan
Jul 21, 2025,04:02 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரியில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.


புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  வந்துள்ளது. இமெயில் மூலம் வந்த இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகம், வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள் அறை, மற்றும் நீதிமன்றங்கள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனையிட்டனர். 


தீவிரமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் எந்த ஒரு வெடிபொருளும் சிக்கவில்லை. இதனால் வழக்கமான வெடிகுண்டு புரளி என போலீசார் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்தில் போடப்பட்டுள்ளது.




புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாய் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.  ஆளுநர் மாளிகை, முதல் அமைச்சர் இல்லம், பிரெஞ்சு தூதரகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.


வெடிகுண்டு மிரட்டல் நரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரால் துப்புதுலக்க முடியவில்லை.  இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.