முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீடு மற்றும் நடிகை திரிஷாவின் வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒரு பேஷனாகி வருகிறது. இமெயில்களில்தான் இப்போதெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், காவல்துறையினர், என எல்லோருக்குமே பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இமெயில் மூலமாக வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர் மோப்ப நாய்கள் மூலம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து, மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் அவரது வீட்டில் சோதனை போட்டனர் என்பது நினைவிருக்கலாம்.