சிந்தூர் வெற்றி நாயகன் பிரமோஸ் ஏவுகணைகளால் இந்தியாவிற்கு கிடைத்த ஜாக்பாட்!

Su.tha Arivalagan
Nov 27, 2025,05:21 PM IST

- க. சுமதி


பெங்களூரு: இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவானது பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை. இந்த ஏவுகணைகளுக்கு இப்போது பல்வேறு நாடுகளிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாம்.


பிரமோஸ் ஏவுகணையானது பெங்களூருவில் உள்ள இந்திய பாதுகாப்பு  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையால் (DRDO) உருவாக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா நடத்திய சிந்தூர் திட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்ததில் முக்கிய பங்கு வைப்பது பிரமோஸ் ஏவுகணைகள் ஆகும். இந்த ஏவுகணைகள் நீர்மூழ்கி கப்பல்,கப்பல் போர்விமானம் மற்றும் தரைதளம் போன்ற நான்கு  வகையான தளங்களில் இருந்தும் இலக்கை நோக்கி அதி வேகமாக செயல்படும் திறன் கொண்டது.




பிரமோஸ், சூப்பர்சோனிக் ஏவுகணைகள் 350 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களை தாங்கி செல்லும் திறன் கொண்டவை. மேலும் இவை 450 கிலோமீட்டர் வரை அதி வேகமாகச் சென்று தாக்கும் ஒரு தானியங்கி ஏவுகணைகள் ஆகும். இந்த ஏவுகணைகள் இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது இந்தியாவின் எல்லை  பாதுகாப்பை மேலும்  வலுவாக்கியுள்ளது.


கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா பிலிப்பைன்ஸ்- இடையே ரூபாய் 412 கோடி மதிப்பீட்டில்  பிரமோஸ் ஏவுகனை ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 450 மில்லியன் (இந்திய ரூபாயில் 4,011,93 கொடி)  மதிப்பில் இந்திய இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது.  


இதனை தொடர்ந்து துபாய் விமான கண்காட்சியில் இந்திய பாதுகாப்பு பாதுகாப்பு  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில்  கண்காட்சிக்காக  வைக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகனைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. பல்வேறு நாடுகளும் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியப் பாதுகாப்புத்துறைக்கு பெரும் ஊக்கம் தரும் செய்தியாக அமைந்துள்ளது.


பிரமோஸ் என்றாலே உலகத்தோர் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த பிரமோஸ் ஏவுகனைகளின் தொழில்நுட்பம் மேம்பட்டதாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி INAS விக்ராந்த் கடற்படை நிகழ்ச்சியில் உரையாற்றிய து குறிப்பிட்டத்தக்கது. தற்போது அது உண்மையாகி வருகிறது.