சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
டில்லி : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டை மனதில் வைத்து பல புதிய திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் இன்று இதை மனதில் வைத்து சில அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
முக்கிய அம்சங்கள்:
- சென்னை- பெங்களூரு, சென்னை-ஐதராபாத் வழித்தடத்தில் அதி வேக ரயில் சேவை.
- பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
- ஆரிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் கலாச்சார மையம்
- ஆன்மீக, சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம்
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
- பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவுக்கான நடவடிக்கை
அதே சமயம் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்டிருந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 %லிருந்து 50 % ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு ஆவலோடு எதிர்பார்த்திருந்த மெட்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.