சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Su.tha Arivalagan
Feb 01, 2026,01:45 PM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 9வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். 


பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு:


பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் உருவான திட்டங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது.




இந்தியாவின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் போய்க் கொண்டுள்ளது.


3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் இந்த பட்ஜெட்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.


பட்ஜெட்டில் இடம் பெற்ற 3 கடமைகள்: கட்டமைப்பு சீர்திருத்தங்களின் வேகத்தைத் தக்கவைத்தல், வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட நிதித்துறை, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள்.


பட்ஜெட் இளைஞர்கள் நலனை முக்கியக் குறிக்கோளாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


அரசாங்கம் வெற்றுப் பேச்சுகளை விட சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளது - நிர்மலா சீதாராமன்


இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 (India Semiconductor Mission 2.0), குறைக்கடத்திகளுக்கான (Semiconductors) தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் கவனம் செலுத்த உள்ளது.


உயிரி-மருந்தியல் (Bio-pharma) துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு: இந்தியாவை உலகளாவிய உயிரி-மருந்தியல் மையமாக மேம்படுத்துவதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 'பயோபார்மா சக்தி' (Biopharma Shakti) என்ற திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 10,000 கோடி செலவிடப்பட உள்ளது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறு துறைகளில் வளர்ச்சி குறித்து முன்மொழிந்துள்ளார்:


ஏழு முக்கிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல்

  • பாரம்பரிய தொழில் துறைகளுக்குப் புத்துயிர் அளித்தல்: தொன்றுதொட்டு விளங்கும் பழைய தொழில் துறைகளை நவீனப்படுத்தி மீண்டும் வலுப்படுத்துதல்.
  • முன்னணி MSME-க்களை உருவாக்குதல்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSMEs) உலகத்தரம் வாய்ந்த 'சாம்பியன்களாக' மாற்றுதல்.
  • கட்டமைப்பு வசதிகளுக்குப் பலமான ஊக்கம் அளித்தல்: நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மிகப்பெரிய அளவிலான நிதி மற்றும் திட்ட ஆதரவை வழங்குதல்.
  • நீண்ட கால பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல்: நாட்டின் பொருளாதார மற்றும் இதர பாதுகாப்பினை நீண்ட கால அடிப்படையில் உறுதிப்படுத்துதல்.
  • நகர்ப்புற பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல்: நகரங்களை மையமாகக் கொண்ட பொருளாதாரப் பகுதிகளை (City Economic Regions) மேம்படுத்துதல்.


தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி உயர்ந்து வருகிறோம். இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதம் உயர்வு.  நாட்டின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே அரசியன் பிரதான செயல் திட்டம். 


தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்.


நிதி ஒதுக்கீடு: செமிகண்டக்டர் துறைக்கு - 40,000 கோடி, பயோ மெடிக்கல் துறை - ரூ.10,000 கோடி.


கிராமப்புரங்களில் கைத்தறி தொழிலை ஊக்குவிக்க மகாத்மா காந்தி பெயரில் புதிய உற்பத்தி திட்டம் துவங்கப்படும்.


2026-2027 நிதியாண்டில் மூலதன செலவு ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு. காந்தி பெயரில் 5 ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.நீர் வழியாக நாடு முழுவதும் 20 துறைமுகங்களை இணைக்க திட்டம்.


புதிய ரயில்வே வழித்தடங்கள் - சென்னை


சென்னை-பெங்களூரு, சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும். சென்னை-பெங்களூரு இடையே 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை


பட்ஜெட் தயாரிப்பின் முக்கிய நோக்கம்:


1. நிலையான வளர்ச்சி

2.மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவது

3. அனைவருக்கும் சமமான பலன்களை அளிப்பது


அனிமேஷன் துறைக்கு தனி கல்வி மையம்


அனிமேஷன், கேமிங் வளர்ச்சிக்கு தனி கல்வி மையம் அமைக்கப்படும். நாட்டில் 5 பல்கலை நகரங்கள் புதிதாக உருவாக்கப்படும்


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை


வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்.


மாவட்டந்தோறும் மாணவிகளுக்கு விடுதி


மாணவிகளுக்கு மாவட்டந்தோறும் விடுதிகள் அமைக்கப்படும். மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா


பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.


பள்ளிகளில் கன்டென்ட் ஊக்குவிக்க திட்டம்


நாடு முழுவதும் 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் கன்டென்ட் உருவாக்கத்துக்கு புதிய திட்டம் அறிமுகம்.