என்னையா இது... நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது தங்கம், அதன்பின்னர் ஜூன் 16,17 ஆகிய இரண்டு நாட்களில் குறைந்திருந்தது. இந்த விலை குறைவு தொடரும் என்று எண்ணியிருந்த வாடிக்கையாளர்களுக்கு இன்று ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்த விலைமாற்றத்தை எண்ணி வாடிக்கையாளர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (18.06.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,091க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,615க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,250ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 92,500 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,25,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,091 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,728 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,00,910ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,09,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,091க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,106க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,091க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,091க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,091க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,091க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,096க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,707
மலேசியா - ரூ.9,224
ஓமன் - ரூ. 8,977
சவுதி ஆரேபியா - ரூ.8,879
சிங்கப்பூர் - ரூ. 9,114
அமெரிக்கா - ரூ. 9,062
கனடா - ரூ.9,046
ஆஸ்திரேலியா - ரூ.9,097
சென்னையில் இன்றைய (18.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 121 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 968 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,210ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,21,000 ஆக உள்ளது.