காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
சென்னை: தங்கம் விலை இன்று 2 முறை உயர்ந்துள்ளது. காலையில்சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்த நிலையில், பிற்பகல் சவரனுக்கு ரூ.920 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதிலும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்து தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்துள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு பின்னர் தங்கம் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை தாறுமாறாகக் குறைந்துள்ளது.. தங்கம் விலை இப்படித் தொடர்ந்து குறைவது, அதை அதிகபட்ச விலையில் வாங்கியவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிலிம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 குறைந்தது.
நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராமிற்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,210க்கும், ஒரு சவரன் ரூ. 89,680க்கும் விற்பனையானது. இதனையடுத்து மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும் போது, தங்கம் விலை மேலும் கிராமிற்கு ரூ.112 அதிகரித்து ரூ.11,325க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை இன்று காலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.166க்கு விற்பனையான நிலையில், மாலையில் எந்த மாற்றமும் இன்றி காலை விலையிலேயே வெள்ளி இருந்து வருகிறது. தீபாவளிக்கு முன்னர் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.