தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1800 குறைவு... மாலையில் ரூ.1,600 உயர்வு!

Meenakshi
Oct 30, 2025,04:55 PM IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்த்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. இந்த விலை வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு அடுத்த படியாக கடந்த 22ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து காணப்பட்டது.


கடந்த 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் வரை தங்கம் விலை சரிந்தது. இந்த சூழலில் மேலும் தங்கம் விலை குறையும் என நேற்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், தங்கம் விலை ஏற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்தது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 




இந்த நிலையில், இன்று காலை மீண்டும் அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கத்தின் மீதான் இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருவதால் நகை வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.