கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,697க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,115க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், உலகளாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபரணம் ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தற்போது தங்கம் கருதப்பட்டு வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருவது நடுத்தர வர்த்தகத்தின் தங்க நகை மீதான ஆசையை கனவாக்கி வருகிறது தங்கம் விலை என்று செல்வதில் மிகையில்லை எனலாம்.
சென்னையில் இன்றைய (03.09.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,805 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 78,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 98,050ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,80,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,697 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.85,576 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,06, 970ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,69,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,712க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,702க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,042
மலேசியா - ரூ. 10,216
ஓமன் - ரூ. 10,169
சவுதி ஆரேபியா - ரூ.10,181
சிங்கப்பூர் - ரூ. 10,667
அமெரிக்கா - ரூ. 10,122
கனடா - ரூ. 10,146
ஆஸ்திரேலியா - ரூ. 10,566
சென்னையில் இன்றைய (03.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.90 காசுகள் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 137 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,096 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,370ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,37,000 ஆக உள்ளது.