வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?

Meenakshi
Jan 31, 2026,05:31 PM IST
சென்னை: வெள்ளி விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்துள்ளது. இன்று காலை கிராமிற்கு ரூ.55 குறைந்த நிலையில், தற்போது மீண்டும் கிராமிற்கு ரூ.30 குறைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த வெள்ளி விலை, ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நிலைகுலைந்து வரலாற்று புதிய உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.



இன்று காலை நேர வர்த்தகத்தின் போது, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக, காலையிலேயே ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.55,000  குறைந்தது. இந்த நிலையில், இன்று மாலை வர்த்தக முடிவின் போது,  மீண்டும் விற்பனை அதிகரித்ததால், மேலும் விலை சரிந்து கிலோவுக்கு ரூ. 30,000 குறைந்தது.

இன்று மட்டும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் ஒரு கிலோவிற்கு அதிரடியாக 85,000 குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி (ஜனவரி 31, 2026) சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ₹320-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சுமார் ₹85,000 குறைந்துள்ளது.