பட்டு பட்டு... பட்டாம்பூச்சி.. பார்த்துப் பார்த்து ரசிச்சாலே.. மனதுக்கு மகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Mar 16, 2026,01:53 PM IST

- சொ.மங்களேஸ்வரி


மனசு பட்டாம்பூச்சியாய் பறக்கிறது என்றும், வயிற்றுக்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறக்கிறது  என்றும் நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் கூறுவதுண்டு. தமிழ் சினிமாக்களில் பட்டாம்பூச்சியைக் காதல், மகிழ்ச்சி மற்றும் இளமையின் குறியீடாகப் பயன்படுத்துகின்றோம்.  


"ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே, அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே, அதைப் பற்றி தெரிந்து கொள்ள மனம் துடிக்கின்றதே" அப்படின்னு பாடி மகிழ்ந்ததைப் பார்த்தோம் இல்லையா.. அப்படிப்பட்ட பட்டாம்பூச்சியைப் பற்றித்  தெரிந்து கொள்வோமா?


பட்டாம்பூச்சி என்பது வண்ணமயமான இறகுகளைக் கொண்ட ஒரு பூச்சி. வாழ்க்கை சுழற்சி முறையில் முட்டை , குடம்பிப் பருவம், கூட்டு புழு கம்பளிப்புழு எனும் நிலைகளைக் கடந்து, பட்டாம்பூச்சியாக உருமாறுகிறது .  கண்ணை கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ளதால் இவற்றை இதை வண்ணத்துப்பூச்சி என்றும் கூறுவர். 

பட்டாம்பூச்சிகள் பொதுவாக பூக்கள் நிறைந்த தோட்டங்கள், காடுகள் , புல்வெளிகள் மற்றும் ஈரப்பதம் மிக்க இடங்களை உறைவிடமாக கொள்கின்றன.




இவை பகலில் இறை தேடிவிட்டு இரவு நேரங்களில் அடர்ந்த மரங்களின் இலைகளுக்கு அடியிலும் பனிக்காலத்தில் குகைகள் போன்ற பாதுகாப்பான இடங்களிலும் ஓய்வெடுக்கின்றன. கல்லாறு, முதுமலை, சிறுமலை போன்ற பகுதிகள் மிகச் சிறந்த வாழிடங்கள் ஆகும். உலகில்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 1379 இனங்கள் உள்ளன. பப்புவா நியூ கினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸ்ன்றி ரா என்பதுதான் மிகப்பெரிய பட்டாம்பூச்சி. இது தன் றெக்கைகளை விரித்திருக்கும் போது 28 சென்டிமீட்டர் நீளம் இருக்கும் பட்டாம்பூச்சியின் ரெக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப் பலவாகும். அதில் காணப்படும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் வெப்பமண்டல காடுகளிலும் பெரும்பாலான வகைகளிலும் குளிர் மிகுந்த உயர்மலை பகுதிகளிலும் கனடாவின் வடமொழைக்கு அருகான பகுதியிலும் ஏன் கடும் வெப்பம் நிறைந்த பாலைவனங்களிலும் கூட வாழ்கின்றன.


பல வகையான தோற்றம் கொண்டவைகளாக இருந்த போதிலும் பண்புகள், ஒலி எழுப்புதல், இருப்பிடத் தேர்வு முதலியவற்றில் ஒற்றுமை உடையானவாகவே உள்ளன. இவை 3000 கிலோமீட்டர் அதிகமான தொலைவு பறந்து வலசை போதல் செய்கின்றது. பட்டாம்பூச்சியின் முட்டைகள் பல அளவிலும் வடிவிலும் நிறத்திலும் காணப்படுபவன. சில நம் கண்ணுக்கே தெரியாத மிகச் சிறியனவாகவும் சில ரெண்டு புள்ளி ஐந்து மில்லி மீட்டர் வரையிலும் உள்ளன பெண் பட்டாம்பூச்சிகள் தம் முட்டைகளை பின்னர் பொறிக்கும் புழுவுக்கு உணவாக அமையக்கூடிய இலைகளில் இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் புழு தன் உணவை தானே சேர்ந்து உண்ண வேண்டும்.


முட்டையிலிருந்து முதலில் வெளிவரும் புழுக்கள் மிகுதியாக இருக்கும் முட்டைகளை உண்டு விடும் பின்னர் அருகில் உள்ள இலைகளை உண்ணத் தொடங்கும் குழு நிலையில் மிக விரைவாக தன் உடல் எடையை விட அதிகமான உணவை உட்கொள்ளுகின்றது. இப்பொழுதுகள் பொதுவாக பழுப்பு நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ இருக்கும் சிலவற்றின் உடல்கள் பல வரிகளும் இருக்கும் குழுவானது வளர்ச்சியடைந்த பின் அடுத்த நிலையாகிய கூட்டுப்புழு நிலைக்கு தயாராகின்றது. முழு வளர்ச்சியடைந்த புழு தன் கோந்துமொழி உருப்பின் உதவியால் பட்டு நூல் போன்ற இலையை வெளியிலிருந்து தன்னைச் சுற்றி ஒரு கூடுகட்டி கொள்கின்றது. முற்றிலும் தன்னுடலைச் சுற்றி நூலிழைகள் போன்ற கூடு கட்டிக்கொள்ளுவதையே கூட்டுப்புழு நிலை என்கின்றோம். 


இந்நிலையில்தான் புழுவானது வியப்பான மாறுதல்களுக்கு உள்ளாகின்றது. உள்ளும் புறமுமாய் உடல் முற்றிலும் உருமாறுகின்றது. பறக்க வல்ல இறக்கைகளும் முளைக்கின்றது. கூட்டில் இருந்து சில நிமிடங்களில் தன் காலால் உந்தித்தள்ளி தன்னை விடுவித்துக் கொள்கின்றது. பட்டாம்பூச்சிக்கு ஆறு நீளமான கால்களும், உறிஞ்சிக் குழாய்களும் ,இரண்டு 1நீண்ட உணர்விழைகளும், ஒரு பக்கத்துக்கு இரண்டு இறக்கைகளாக நான்கு இறக்கைகளும், தலை மார்பு ,வயிறு என முப்பாகம் கொண்ட உடலும் ஆக தோற்றமளிக்கின்றது. இவ்வாறு வெளிவந்த பட்டாம்பூச்சி ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் இறக்கைகளை மேலும் கீழும் அடித்து, பறக்க தயாராகின்றது. ஓரிரு வாரங்கள் தான் சில பட்டாம்பூச்சிகள் உயிர் வாழ்கின்றன.


சில வகை பூச்சிகள் ஓராண்டு ,ஒன்றரை ஆண்டு வரையும் வாழும். பட்டாம்பூச்சிகள் இயற்கையில் இலங்கையில் இருந்து மதுரைக்கு பருவ காலங்களில் வலசை வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் பருவலா வெள்ளையன், வெண்புள்ளி கருப்பன், மயில் அழகி , நீல வசீகரன் உட்பட எழுவது வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகள் பூச்சிகளை உண்ணும். ஆனால் அவை பட்டாம்பூச்சிகளை வேட்டையாடுவதில்லை. அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானவை என பறவைகளின் மூளையில் பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகின்றது.


ஏழு வருடங்களுக்கு முன்பாக நான் வேலைக்குக் காரில் செல்லும் பொழுது, ஒரு பருவநிலையில் அதிக பட்டாம் பூச்சிகள் சாலையில் செல்லும் பலவகையான வாகனங்களில் அடிபட்டு சாலைகளில் இறந்து கிடப்பதையும், என் மகிழுந்து கண்ணாடியில் பட் , பட்என மோதி அதன் உடல் நசுங்கிய திரவத்தை கண்ணாடியில் பதித்து உயிர் நீத்ததையும் காண முடிந்தது.  கிட்டத்தட்ட 50 பூச்சிகளுக்கு மேல் அவ்வாறு இறந்ததைக் கண்டு எனக்கு தொடர்ந்து ஓட்டுவதற்கு மனம் வராமல் கண்கள் குளமாகின. ஏன் இதற்கு வேறு இடம் இல்லையா? அல்லது யோசித்து பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்ய இயலவில்லையா? சாலைகளை விரிவுபடுத்தி அதன் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டோமா? 


இவ்வாறெல்லாம் குழம்பிய குட்டை போல் மனம் இருக்க 20 கிலோமீட்டர் வரை ஓட்டிச் சென்று பழியைச் சென்றடைந்த பின்னும் இயல்பு நிலைக்கு என்னால் திரும்ப இயலவில்லை. உடனே அலைபேசியை எடுத்து அதைப் பற்றிய செய்தியை கூகுள் செய்தேன். அப்போதுதான் தெரிந்தது பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் நச்சுச் செடிகளின் இலைகளில் தான் முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யும் என்று. நான்கு வழிச்சாலையின் நடுவே நாம் அரளிச் செடிகளை நட்டு வைத்துள்ளோம் அல்லவா? அது விஷச்செடி தானே. ஆதலால் அதில் இவைகள் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் பொரித்து பறக்க ஆரம்பிக்கும்போதே சாலையில் செல்லும் வாகனங்களில் மோதி உயிர் நீக்கின்றன .


வெளிவந்த சில மணி நேரங்களுக்குள்ளே அதன் உயிரை நாம் பலியாக்கி விடுகிறோமே என்ற எண்ணத்தோடு அதற்கு மாற்று வழி யோசிக்க வேண்டும் என யாரைக் கேட்பது? இவ்வாறு தான் நம் சுகபோக வாழ்க்கைக்காக பல உயிரினங்களை காவு கொடுக்கின்றோம். 


பட்டாம்பூச்சிகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையில் அவற்றின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது. இந்நாளில் வீட்டில் வண்ணமலர் செடிகளும், காய்கறிச் செடிகளும், பல வகை மரங்களும் வளர்க்கும் நாம் விஷச் செடிகளில் ஒன்றான அரளியையும் வளர்ப்போமே! பட்டாம்பூச்சிகள் பெருக வழி செய்வோமே!


(சொ. மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)