சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவிகளே அதிகம் பாஸ்!

Su.tha Arivalagan
May 13, 2025,04:57 PM IST

டெல்லி:  CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து 88.39% ஆக உள்ளது. 


சென்னை மண்டலத்தில் மொத்தம் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  விஜயவாடா 99.60% தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும், செய்முறை தேர்விலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும். 




மாணவர்களை விட மாணவிகளே 5% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார். 1.15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 90%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24,000க்கும் அதிகமானோர் 95%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1.29 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் துணைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ரோல் நம்பர் மூலம் CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றியும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். துணைத் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது.  


www.results.cbse.nic.in, www.cbse.govt.in, www.umang.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.