அச்சச்சோ.. இசை நிகழ்ச்சியில் எச்.ஆர். டீம் லீடருடன் எக்கச்சக்கமாக சிக்கிக் கொண்ட சிஇஓ!

Su.tha Arivalagan
Jul 18, 2025,10:43 AM IST

மாசசூசட்ஸ்: அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், ஆஸ்ட்ரோனமர்  நிறுவன தலைமை செயலதிகாரி ஆண்டி பைரன், தனது அலுவலக எச்.ஆர் பிரிவு தலைவர் கிறிஸ்டின் கேபோட்டை கட்டி அணைத்தபடி காட்சி தந்து கேமராவில் சிக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாசசூட்ஸில் நடந்த கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியின்போதுதான் இந்த எதிர்பாராத சம்பவம் நடந்தேறியது. ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆண்டி பைரன், அந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி (Chief People Officer) கிரிஸ்டின் கேபோட் உடன் ரகசிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் இந்த நிகழ்ச்சி மூலம் வெளியாகியுள்ளது.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் எதிர்பாராத விதமாகப் பேசுபொருளாகியுள்ளார். வியாழக்கிழமை அன்று, சமூக வலைத்தளங்களில் ஒரு வைரல் வீடியோ பரவத் தொடங்கியது. அந்த வீடியோவில் ஆண்டி பைரனும், கிரிஸ்டின் கேபோட்டும் நெருக்கத்தில் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதாவது கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி காட்சி தந்துள்ளனர். அதை எதிர்பாராதவிதமாக கேமரா ஒன்று படம் பிடித்துக் காட்டியது. 




இந்த திடீர் கேமரா பதிவை எதிர்பாராத இருவரும் டக்கென விலகியுள்ளனர். பின்னர் அங்கிருந்து வேகமாக இருவரும் அகன்று விட்டனர். இந்த கேமரா பதிவு காரணமாக இருவரது நெருக்கமான உறவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, முன்னணி பாடகர் கிறிஸ் மார்ட்டின்தான் இதற்குக் காரணம். அதாவது நிகழ்ச்சியின்போது, ஒரு ஜோடி (ஆண்டி பைரன் மற்றும் கிரிஸ்டின் கேபோட் தான் அவர்கள்) தற்செயலாகக் கண்டார். அவர்கள் ஒருவரையொருவர் அணைத்தபடி நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் அவர்கள் மீது கேமராவைத் திருப்பி விட்டார். இதைப் பார்த்தவுடன் அவர்கள் அதிர்ச்சி அடைந்து விலகி ஓடினர். பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது அவர்கள் பைரன் - கிரிஸ்டின் என்று.


ஆண்டி பைரன் யார்?


ஜூலை 2023 முதல் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணிபுரிகிறார் ஆண்டி பைரன். பைரனும் அவரது மனைவி மெகன் கெரிகனும், இருவருக்கும் 50 வயதாகிறது. நார்த்பரோவில் வசிக்கின்றனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


பைரனின் நிறுவனம், யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது, இதன் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல். சமீபத்தில், இந்நிறுவனம் தனது தலைமையகத்தை நியூயார்க் நகரத்திற்கு மாற்றியது. இதற்கு முன்பு, ஆண்டி பைரன் லேஸ்வொர்க் நிறுவனத்துடன் ஜூன் 2019 முதல் நவம்பர் 2022 வரை அதன் தலைவராகவும், பின்னர் மே 2023 வரை ஆலோசகராகவும் பணியாற்றினார்.


2017 முதல் 2019 வரை, அவர் சைபரீசன் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரியாகப் பணிபுரிந்தார். கூடுதலாக, அவர் ஃபியூஸ் நிறுவனத்தில் தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார், மேலும் கடந்த காலத்தில் வெரிசென்டர் மற்றும் பிஎம்சி மென்பொருள் நிறுவனங்களுடனும் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.