21 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Meenakshi
Jul 31, 2025,04:55 PM IST

சென்னை: சென்னை, செங்கலபட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். 


இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.