திருப்போரூர் முருகன் கோவிலில்.. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜுக்கு.. டும் டும் டும்..!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மற்றும் டாக்டர் கௌசிகா திருமணம் இவர்களது திருப்போரூர் முருகன் கோவிலில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளர் நியமனம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது மூன்றாவது முறையாக எஸ் அருண் ராஜ் ஐஏஎஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதிலிருந்தே மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளித்தார். அதன்படி முதல்வரின் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்து வரும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று மூன்று நாட்களில் தீர்வு வழங்கி வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ் அருண்ராஜ் முன்னதாக பழனியில் சப்-கலெக்டராக பணியாற்றினார். பிறகு தமிழக அரசின் நிதித் துறையிலும், எல்காட் நிா்வாக இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மற்றும் டாக்டர் கௌசிகா திருமணம் இன்று மிக எளிமையாக நடந்து முடிந்தது. நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசாமி கோயிலில் முருகன் சன்னிதானம் முன்பு மிக எளிமையாக நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்