புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
- கண்ணகி அண்ணாதுரை
சென்னை: சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தக திருவிழா இந்த வருடம் 2026 ஜனவரி 7- 19 வரை நடைபெறும் என்று பப்பாசி நிர்வாக குழுவால் வெளியிட்ட அறிவிப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது புத்தகத் தொடக்க விழாவுக்கு முதல்வரின் தேதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2026 ஜனவரி 8ம் தேதி தொடக்க விழா தள்ளிப் போயுள்ளது. அன்று தொடங்கி, ஜனவரி 21வரைம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் தினசரி காலை 11.00மணி முதல் இரவு 08.30வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் பப்பாசி நிர்வாக குழுவால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
புத்தக விழாவில் வழக்கம் போல இடம் பெறும் அனைத்து அம்சங்களும் இந்த முறையும் இடம் பெறும். புத்தகங்கள் வாங்குவதில் கழிவுச் சலுகை உள்ளிட்டவையும் வழக்கம் போல இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு பல ஆயிரம் பேர் வருவார்கள். மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த கண்காட்சியானது, ஒரு திருவிழா போல ஆண்டுதோறும் நடைபெறும். முன்பு பல்வேறு இடங்களில் மாறி மாறி நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி கடந்த சில வருடங்களாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
(கண்ணகி அண்ணாமலை, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)