சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
Dec 05, 2025,07:10 PM IST
- கண்ணகி அண்ணாதுரை
சென்னை: புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி 2026 அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி புத்தக ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய புத்தக வேட்டையாக அமைவது வழக்கமாகியுள்ளது. வருடந்தோறும் சென்னையில் பொங்கல் பண்டிகையோடு புத்தகக் கண்காட்சி நடைபெறும். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பே புத்தகக் கண்காட்சி முடிந்தது பல புத்தக பிரியர்களுக்கு வருத்தை ஏற்படுத்தியது.
அதை போக்கும் விதமாக வரும் 49ஆவது சென்னை புத்தகக் காட்சி 2026 ஜனவரி 7 முதல் 19 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என பப்பாசி தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த முறை பொங்கலோடு சேர்த்து புத்தகத்தையும் வாங்கியும் படித்தும் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காணும் பொங்கலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சிக்குப் போகாமல் முதலிலிருந்தே போய் விரும்பிய புத்தகங்களை வாங்கி கொண்டாடுமாறு அன்போடு புத்தகப் பிரியர்களை அழைக்கிறோம்.
(கண்ணகி அண்ணாதுரை, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)