5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு!
சென்னை: சென்னையில் 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே இனி அபாரதம் வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே வாகன ஓட்டிகளிடம் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபாரதாம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் கெடுபிடியாக அபராதம் வசூலிப்பதாக புகார் வந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி,
1. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்
2. இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது
3. போக்குவரத்து தடை செய்யப்பட்ட நோ என்ட்ரி பகுதியில் வானம் ஓட்டுதல்
4. அதிவேகமா வாகனத்தை இயக்குதல்
5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்
மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.