சென்னை தமிழாசிரியைக்கு குரு துரோணாச்சார்யா விருது.. புதுச்சேரி விழாவில் கெளரவம்
சென்னை: புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த தமிழாசிரியைக்கு குரு துரோணாச்சார்யா விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
செ. வெ. ரெக்கார்ட்ஸ் ஹோல்டர் போர்ம் சார்பில் 5 ஆம் ஆண்டு ஆசிரியர் தினவிழா நிகழ்வு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புனித தெரெசா மெட்ரிக் மேல்நிலைப்பபள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் திருமதி. கவிஞர் பொ. கிருபாவதி அவர்களுக்கு All India Book Of Records நிறுவனர் உலக சாதனையாளர் செ. வெங்கடேசன் அவர்கள் குரு துரோனாச்சார்யா விருதினை வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் வேலூர் முத்தமிழ் சங்க நிறுவனர் உலகசாதனையாளர் தூய தமிழ் பற்றாளர். சி.கலைவாணி, புதுவை தமிழ்சங்கத் தலைவர் கலைமாமணி க. முத்து மற்றும் தமிழ் ஆளுமைகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் .
கவிஞர். பொ. கிருபாவதி சிறந்த தமிழாசிரியர் விருது, கல்வி வளர் நல்லாசிரியர் விருது, legend award, Iconoc Award, Womens Achivers Award, சாதனைக்கவிஞர், தமிழ் முகில், அருந்தமிழ் தாரகை விருது, HOTSTAR AWARD . போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
திருக்குறளே தேசிய நூல் என்ற ஆய்வுக்கட்டுரையை கவிஞர் பொ. கிருபாவதி எழுதியுள்ளார். சங்க இல்க்கியங்களுக்கு கவிதைகள் எழுதியுள்ளார். சிறுபஞ்சமூலம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள் ஆய்வுக்கட்டுரை , மரமே மாற்றத்தின் விதை கட்டுரை , கவிதை, எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளிலும், கவியரங்கம் இணைய வழி பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார் . 20 ஆண்டுகளாக முதுகலை தமிழாசிரியாகப. பணியாற்றிவருகிறார். இத்தனை ஆண்டுகளும் 100%தேர்ச்சி மட்டுமே கொடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
All India book of record , my bharath book of records, போன்ற அமைப்புகள் நடத்தும் உலக சாதனை நிகழ்வுகளில் பங்கேற்று இதுவரை 100 க்கும் மேற்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் பெற்றுள்ளார். தமிழ் என் உயிர் மூச்சு , தடம் பதிக்கும் தளிர்கள், பாரதியின் பாதையில் , தமிழ்க் கதிர் சங்கம்ம், சென்னை செந்தமிழ் மன்றம் ஆகிய அமைப்புகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று கவிதை எழுதுதல், பட்டிமன்றம் , கருத்தரங்கம் , உரையரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிச்சான்றிதழ்கள் பெற்றுள்ளார் கவிஞர். பொ. கிருபாவதி.