வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி: திருச்சியில் மதிமுக பொதுச்செயலார் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு இன்று முதல் சமத்துவ நடைப்பயணம் செல்கிறார். தென்னூர் உழவர் சந்தை அருகே நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். திருச்சியில் தொடங்கும் இந்த நடைப்பயணம் ஜனவரி 12ல் மதுரையில் நிறைவடைகிறது.
நாளொன்றுக்கு சுமார் 600 பேருடன் 15 முதல் 17 கி.மீ. வரை நடக்கத்திட்டமிட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன், துறை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் அமைச்சர்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நடைப்பயணத் தொடக்க விழா அழைப்பிதழின் முகப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்ததே காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.