போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Jun 24, 2025,01:12 PM IST

சென்னை: போலிப் பாசம் தமிழுக்கு, பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.


கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு ரூ.2532 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு வெறும் ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ புள்ளிவிவர தகவல் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும்  மற்றைய மொழிகளுக்கு குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதிக நிதி ஒதுக்கியிருப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 




போலிப் பாசம் தமிழுக்கு: பணமெல்லம் சமஸ்கிருதத்துக்கு! சமஸ்கிருதத்திற்கு மட்டும் கோடிகளை ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, தென்னிந்திய மொழிகளுக்கு ஒன்றும் ஒதுக்கவில்லை.வெறும் முதலை கண்ணீர் தான் என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்ட பதிவில்,


பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது.


தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான்.


இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி என்று தெரிவித்துள்ளார்.