பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
May 19, 2025,09:05 PM IST

சென்னை: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலொசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அதிகரிகள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.




மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையை எதிர்கொள்ள தயாரக இருக்க வேண்டும். பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.