மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா என்ற கேள்விக்கு மதுரை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதுரையில் ஒரு புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் எந்தத் திசையில் போகப் போகிறது என்று தெரியவில்லை. மிக மிக உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினையை மதுரை மக்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ இரயில்,
AIIMS,
புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது என்று அதில் முதல்வர் கூறியுள்ளார்.
இந்த எக்ஸ் தளப் பதிவு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மதுரையின் நீண்ட கால கோரிக்கை எய்ம்ஸ். அதன் கட்டடம் இன்னும் முடியவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாகவும் தாமதம் நிலவுகிறது. மதுரையில் பெரிய அளவில் தொழிற்சாலைகளும் இல்லை. இதைத்தான் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதில் எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ ஆகியவை மத்திய அரசுடனும் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.