மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jul 22, 2025,07:04 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி தனது பணிகளைத் தொடர்வதாக கூறியுள்ளார்.


வாக்கிங் சென்றபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன் இறுதியில் அவர் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.


அதன்படி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர்.




இந்த நிலையில் முதல்வர் இன்று ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.