தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மத்திய அரசுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. தமிழ்நாடு பணியாது.. நாங்கள் ஒன்றாக எழுவோம்.. இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
உலக மக்கள் தொகை தினத்தன்று, மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:
மக்கள் தொகை கட்டுக்குள் வைத்திருப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரமளிக்கிறது.
அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது. நிலையான வளர்ச்சியை ஆதரிக்கிறது.
ஆனால், இதற்குப் பதிலாக நமக்கு என்ன கிடைக்கிறது?
குறைவான நாடாளுமன்ற இடங்கள். குறைந்த நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் குரல். ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அது டெல்லிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதில் மோசமானது என்னவென்றால் - திரு. பழனிசாமி மற்றும் அவரது கட்சி தமிழ்நாட்டுடன் நிற்காமல், டெல்லியுடன் நிற்கிறார்கள். நமது முன்னேற்றத்திற்காக நம்மை தண்டிக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு அவர்கள் துணை போகிறார்கள்.
ஆனால் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: தமிழ்நாடு பணியாது. நாம் ஒன்றாக எழுவோம் - இது ஓரணி vs டெல்லி அணி என்று முதல்வர் கூறியுள்ளார்.https://www.thentamil.com/topic/world-popoulation-day