தூய உள்ளங்களான செவிலியர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
May 12, 2025,12:13 PM IST

சென்னை: அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைத்தை முன்னிட்டு, உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஒரு புள்ளியியல் நிபுணர். சமூக சீர்திருத்தவாதி, செவிலியராக பணியாற்றியவர். இவர் கை விளக்கேந்திய காரிகை என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார். சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது பிறந்த தினத்தில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கொண்டு வந்த இந்த நாள் உலகம் முழுவதிலும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்தவகையில், இந்த ஆண்டு செவிலியர்களைப் பராமரிப்பது பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.




இந்த நிலையில்,  செவியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.