கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Meenakshi
Oct 16, 2025,06:14 PM IST

சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இது குறித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்


* கச்சத்தீவு மீட்பு




* இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்


* மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்


* பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு


* கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல்


ஆகியவற்றை, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.