விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை : சென்னையில் ரூ.1200 கோடியில் விரைவில் புதிய தலைமை செயல்கம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் இந்த தகவலை அறிவித்துள்ளார்.
புதிய தலைமை செயலகம் :
இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் விஜய், "தற்போது ஜார்ஜ் கோர்ட்டையில் இயங்கி வரும் தலைமை செயலகம் 400 ஆண்டுகள் பழமையான கட்டிடம். இதில் 4 ஏக்கர் பரப்பளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்தும் நெருக்கடியாக இட வசதி இல்லாமல் இருப்பதால் புதிய தலைமை செயலகம் அவசியமானதாகும். இவற்றை கருத்தில் கொண்டு ரூ.1200 கோடி செயவில் சென்னையில் விரைவில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும். 20 லட்சம் சதுரடி பரப்பளவில் சட்டசபை, அரங்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட தலைமை செயலகம் விரைவில் கட்டப்படும்" என அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.
மேலும் அவர் பேசுகையில், அடுத்த 100 ஆண்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன சட்டசபை, தலைமை செயலக வளாகம் அடங்கிய புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
தமிழை வழக்காடு மொழியாக தீர்மானம் :
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி முதல்வர் விஜய், சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ் மொழியை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் ஆகியவற்றை சாமானி மக்களும் அறியும் வகையில் இந்த நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் நீதிமன்ற உத்தரவுகள் வந்தால் அது நீதி தேவதையின் கரங்களை பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.