Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை
Jul 11, 2026,07:30 PM IST
சென்னை: வியட்நாம் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 10 பேர் உள்பட 15 இந்தியர்கள் பலியான சம்பவம் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வியட்நாடில் நடந்த கோரமான படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரும், கேரளாவைச் சேர்ந்த 2 பேரும் இந்த விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த 15 பேரின் விவரங்கள் வருமாறு:
தமிழ்நாடு
செந்தில் குமார் ஜெயவேல்
முருக பிரபு ஆறுமுகம்
ஸ்ரீதர் சுந்தரராஜன்
ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத்
பாலாஜி நடேசன்
வினய்குமார் சித்தாபுரம் பாஸ்கரன்
ரவிசங்கர் சுகுமாறன்
சந்தோஷ் குமார்
பாபு குப்புசாமி
அழகுராஜன் சிவசாமி
ஆந்திரா
நல்லபேட்டா ஆதி சேஷய்யா ரவி தேஜா
ஸ்ரீதர் முடியம்
ஜெயலட்சுமி கெல்லி
கேரளம்
அவிகாட் செரியன் தாமஸ்
லாவனி தாமஸ்
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:
வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.