CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
May 10, 2026,11:47 AM IST
சென்னை: கஜானாவில் என்ன இருக்கு என்று முதலில் பார்க்க வேண்டும். என்ன இருக்கு, என்ன இல்லை என்று பார்த்து விட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப் போகிறேன். அதை வெளியிட்டு விட்டு எனது வேலைகளைச் செய்யப் போகிறேன் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் முக்கியக் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். அவை: 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவசம், சிங்கப் பெண்கள் அதிரடிப்படை உருவாக்கும், மாவட்டங்கள் தோறும் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படை உருவாக்கும் ஆகியவையாகும்.
அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் விஜய் ஆற்றிய உரை:
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
என்ன சொல்றது எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. சினிமாவில எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடையணும்னு இருந்த ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டருக்கு பிறந்த ஒரு பிள்ளையா எனக்கும் வாழ்க்கையில வறுமைனா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். பசினா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் ஒன்னும் பெரிய மன்னர் பரம்பரையில இருந்தல்லாம் வந்துரல.
உங்கள மாதிரிதான் உங்கள்ல ஒருத்தன் மாதிரிதான். உங்க குடும்பத்தில ஒருத்தன் மாதிரிதான். உங்க பிள்ளை மாதிரிதான். உங்க மகன் மாதிரிதான். உங்க அண்ணன் மாதிரிதான். உங்க தம்பி மாதிரிதான். அப்படித்தான் நான் உணர்றேன்.
நீங்களும் என்ன அப்படி நினைச்சதுனாலதான் சினிமாவில எனக்கு ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை ஒன்னு கொடுத்தீங்க. அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவத்காக. அரசியலுக்கு வந்த உங்க விஜய இந்த விஜய நீ வா விஜய் நாங்கல்லா இருக்கோம் பாத்துக்கறோம். விஜய் தம்பி நீ வா நாங்க இருக்கோம் . விஜி தம்பி நீ வா நாங்க இருக்கோம். அண்ணா நீ வாண்ணா நாங்களாம் இருக்கோம். நண்பா நீ வா நண்பா நாங்களா இருக்கோம்னு சொல்லி அவ்வளவு அன்பா அவ்வளவு உறவா என்ன ஏத்துக்கிட்டீங்க.
இந்த நேரத்தில் இத நான் சொல்லணும் இந்த டிராவல்ல இந்த ப்ராசஸ்ல எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள்
எனக்கு எவ்வளவோ அவமானப்படுத்துனது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எனக்காக கூட நின்ன உங்களுக்கும் அதே மாதிரி கஷ்டங்கள், அதே மாதிரி அவமானங்கள், அதையெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காம அதையெல்லாம் நீங்க பொருட்டாவே எடுத்துக்காம என்னோட வலிகளை என்னோட வேதனைகளை உங்களோடதா நினைச்சு என் கூடவே நின்னு இன்னைக்கு ஜோசப் விஜய் எனும் நான் அதை வந்து உண்மையாக்கி இருக்கறீங்க.
உண்மையிலேயே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னுடைய உறவுகளே என்னுடைய சொந்தங்களே நான் ஒன்னும் தேவதூதன் எல்லாம் கிடையாது. நானும் ஒரு இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்ற ஒரு சாதாரணமான மனுஷன்தான். நான் முன்னாடியே சொன்ன மாதிரி அது செய்வேன் இது செய்வேன்னு பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்து உங்களை நான் ஏமாத்த மாட்டேன். எது சாத்தியமோ அது மட்டும்தான் நான் செய்வேன். இம்மீடியட்டா உங்க மனசுல ஒரு கேள்வி ஒன்னு வரலாம். அப்ப சாத்தியம் இல்லாதத செய்ய மாட்டாங்களா. செய்ய முடியாதா அப்படின்ற ஒரு கேள்வி ஒன்னு வரலாம். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கலாம். என்ன வந்தாலும் பார்த்துக்கலாம் அப்படின்ற அந்த கான்பிடன்ஸ் என் மனசுல இருக்கு.
இன்னொரு விஷயமும் நான் இங்க சொல்லணும் இன்னைக்கு நம்ம தமிழ்நாடு கவர்மெண்ட் இருக்கிற அந்த நிலைமையை பத்தி நான் உங்ககிட்ட நான் சொல்லணும். கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிக்கு மேல கடன் வாங்கி வச்சிட்டு போயிருக்கிற இன்னைக்கு அந்த தமிழ்நாடு அரசு இருக்கிறப்போ கஜானாவை சுத்தமா தொடைச்சி வழிச்சு வச்சிட்டு போயிருக்கிறப்போ தூக்க முடியாத சுமையை ஏத்தி வச்சிட்டு போயிருக்கிறப்போ சோ அப்படிப்பட்ட ஒரு நிலைமையில தான் இந்த பொறுப்பை நம்ம கையில எடுத்திருக்கிறோம்.
முதலில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்
உடனே நீங்க நினைக்கலாம் என்னடா இவர் ஏதோ பொறி வச்சு பேசுறாரா. அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது . உள்ள போய் பார்த்தாதான் தெரியும். எது எந்த நிலைமையில் இருக்குன்னு, என்ன இருக்கு என்ன இல்ல. எது எந்த நிலைமையில் இருக்கு. எது எந்த நிலைமையில் இல்ல. சோ அதையெல்லாம் பார்த்துட்டு உங்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கையா அத வெளியிடணும்னு நான் நினைக்கிறேன். ஒரு ஒரு டிரான்ஸ்பரண்டான ஒரு கவர்மெண்ட்டா அதாவது இன்னைக்கு நம்ம தமிழ்நாடு கவர்மெண்ட் இந்த நிலைமையில தான் இருக்கு அப்படின்றத உங்ககிட்ட சொல்லிட்டு just want to take it forward. அததான் நான் முதல்ல செய்யணும்னு நினைக்கிறேன்.
தமிழ்நாடை பொறுத்தவரைக்கும் யாரையாவது போய் ஏதாவது சந்திக்கணும் அப்படின்னா இந்த மூஞ்சை மூடிக்கிட்டு போய் சந்திக்கிறதோ என்ன இந்த மறைமுகமா உங்களுக்கு தெரியாம போய் சந்திக்கிறதோ அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன். எதுவா இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு மறைவில்லாமல் தான் நான் செய்வேன். இவ்வளவு பெரிய ஒரு பொறுப்பை என் கையில கொடுத்திருக்கீங்க. அதே நேரத்தில எனக்கு கொஞ்சம் அவகாசமும் நீங்க கொடுக்கணும்னு நான் ரிக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிறேன்.
நான் சொன்னதை எல்லாம் படிப்படியா நிறைவேத்த நான் ட்ரை பண்ணுவேன். நிறைவேற்றுவேன். அதே நேரத்தில எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களுடைய ஆட்சி பெண்கள் பாதுகாப்பை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன். போதை பொருள் கலாச்சாரம் அதை கண்ட்ரோல் பண்றதுக்கு என்னென்ன ஸ்டெப்ஸ் எடுக்கணும் என்னென்ன முயற்சிகள் எடுக்கணும் இன்னிலிருந்தே அதை நான் எடுப்பேன். நம்ம பசங்களை அதிலிருந்து காப்பாத்த வேண்டியது நம்ம அரசினுடைய பொறுப்பு.
மக்களுடையை காசைத் தொட மாட்டேன்
அதே மாதிரி சட்டம் ஒழுங்க எல்லாருக்குமான பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்ன அவமானப்படுத்துனவங்களாகவே இருந்தாலும் என்னை கஷ்டப்படுத்துனவங்களாகவே இருந்தாலும் அவங்களும் என் மக்கள் தானே . நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் எட்டு கோடி மக்களும் என் மக்கள் தானே. அது மாதிரி இந்த அடிப்படை விஷயங்கள், கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி இந்த மாதிரி விஷயங்களில் தான் என்னுடைய முழு முதல் கவனம் செலுத்தனும்னு எனக்கு தோணுது.
நான் முன்னாடியே சொன்ன மாதிரி மக்கள் பணத்தில இருந்து ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை அது உங்களுக்கு நல்லாவே தெரியும். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான். தப்பு பண்ணவும்
விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி என்னோட கவர்மெண்ட்ல என் கூடவே இருக்கறவங்களாகவும் சரி விடமாட்டான். சப்போஸ் யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் மனசுல இருந்துச்சுன்னா நாம ஜெயிச்சிட்டோம் ஒரு ஆட்டம் ஆடி பார்க்கலாம். அப்படின்ற எண்ணம் யாருக்காவது இருந்துச்சுன்னா இப்பவே இந்த நிமிஷமே அதை எரேஸ் பண்ணிருங்க.
ஒரே பவர் சென்டர்தான்
இங்க ஒரே சென்டர்தான். என் தலைமையில் உண்டான சென்டர். இந்த பக்கம் ஒரு சென்டர், அந்த பக்கம் ஒரு பவர் சென்டர், அங்க ஒரு பவர் சென்டர், அதெல்லாம் கிடையவே கிடையாது. இப்பவே சொல்லிடுறேன்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கிற மக்கள், மீனவர்கள் எல்லாருமே நம்ம டிவிகே அரசுல நல்லா இருப்போம் நல்லா இருப்போம் நல்லா இருப்போம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அப்படின்றதுதான் நம்ம சமரசம் இல்லாத அடிப்படை கோட்பாடு.
சிறுபான்மை சகோதரர்களே உங்களுக்காக நம்ம டிவிகே அரசு கூடவே நிற்கும். உங்களுக்கு அதுல எந்தவிதமான சந்தேகமும் வேணாம். இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜயினுடைய முகம். அதுல 100% நீங்க இந்த விஜயை நம்பலாம்.
இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்த மக்கள் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன். இன்னொருத்தவங்களுக்கும் முக்கியமா நான் நன்றி சொல்லணும். அது இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா நண்பிகள். அவங்களாலதான் இது நடந்திருக்கு. உங்களுக்கு என்ன செய்யணும், உங்க எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எல்லா நல்ல விஷயங்கயைும் விஜய் மாமா செஞ்சு கொடுப்பேன்.
அனைவருமாக சேர்ந்து ஒரு புது ஆட்சியைக் கொடுப்போம். இது ஒரு புதிய தொடக்கம். புதிய சகாப்தம். உண்மையான மதச்சார்பற்ற சமூக நீதி அரசு இப்போது தொடங்கி விட்டது என்றார் விஜய்.