Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய் அமைத்துள்ள அரசின் முதல் அமைச்சர்கள் இன்று உற்சாகமாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த விஜய் சர்க்கார் வெற்றிகரமாக இன்று அமைந்து விட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள், பல்துறைப் பிரபலங்கள் என பெரும் அளவில் நேரு ஸ்டேடியத்தில் கூட்டம் களை கட்டிய நிலையில், கோலாகலமான விழாவாக இன்றைய பதவியேற்பு விழா நடைபெற்று முடிந்தது.
விஜய்யுடன் 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
1. என்.ஆனந்த் (தி.நகர்)
2. செங்கோட்டையன் (கோபிசெட்டிப்பாளையம்)
3. ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்)
4. சிடிஆர்நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்)
5. வெங்கட்ரமணன் (மயிலாப்பூர்)
6. ராஜ்மோகன் (எழும்பூர்)
7. டாக்டர் டி.கே.பிரபு (காரைக்குடி)
8. கீர்த்தனா (சிவகாசி)
9. அருண் ராஜ் (திருச்செங்கோடு)
10 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் விஜய்க்கும், அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் பிரமாண்ட பேனர் பதவியேற்பு விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. தவெகவினர் பெருமளவில் உற்சாகத்துடன் ஸ்டேடியத்தில் திரண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி இருந்தனர் . தங்களது அன்புக்குரிய ஸ்டார் இன்று முதல்வராகப் போவதைக் காணும் உற்சாகத்துடன் அத்தனை பேரும் காலையிலேயே வந்து குழுமி விட்டனர்.