கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை: சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்!

Meenakshi
Nov 18, 2025,04:56 PM IST

சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கை நிராகரிக்கப்படவில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மதுரை, கோவை மெட்ரோ திட்டம் தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு மத்திய அரசு கோப்புகளை அனுப்பி உள்ளது. திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை  என்று  சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கத்தில், திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடரும் என்றும், இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.




மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இருந்த மக்கள் தொகைக்கும் தற்போதுள்ள மக்கள் தொகை குறித்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ள கோப்புகுளை அனுப்பியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.