ஓம் சாமியே சரணம் ஐயப்பா
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
சபரிமலைக்கு வாருங்கள் ...
ஐயனின் திருவருள் காணுங்கள்......
உள்ளம் மகிழ்ந்திட அவன் புகழை ....
உருகிட உருகிடப் பாடுங்கள்.....
ஆறு வாரமே விரதமிருந்து
ஐயனின்
துணையை நாடுங்கள்.....
சபரிகிரிசன் துணையிருப்பான்....
சங்கடமின்றி அவன் காப்பான்.....
சந்தனம் மணக்கும் அவன் மலையில் .....
ஜவ்வாது நறுமணம் தந்திடுவான்......
பம்பை நதியில் நீராடி....
பக்தியாய் ஐயன் புகழ்பாடி.....
உள்ளம் மகிழ்ந்திட தேடிச் சென்றால்.....
சக்திகள் எல்லாம் அவன் தருவான்...
கணங் கணங்கென்ற மணியோசை..
அதுவே அவனது அருளோசை.......
கணங் கணங்கென்ற மணியோசை..
அதுவே அவனது அருளோசை.......
தினம் தினமே பூஜை செய்தால்.....
திவ்யமாக வந்தமர்வான்.......
சபரிமலைக்கு வாருங்கள்..
ஐயனின் திருவருள் காணுங்கள்.....
கார்த்திகை மாதமே நோன்பிருந்து.......
கீர்த்தி வாசனை நாடுங்கள்...
உள்ளம் மகிழ்ந்திட அவன் புகழை ......
உருகிட உருகிட பாடுங்கள்....
கன்னி சாமியாய் அவன் வருவான் .....
சரங்குத்திஆளில் ஆடிடுவான்.......
வாபரின் தோழனாய் மகிழ்ந்திடுவான்...
வாஞ்சையுடனே காத்திடுவான்...
பகவான் சரணம் பகவதி சரணம் ....
சரணம் சரணம் ஐயப்பா....
பகவதி சரணம் பகவான் சரணம்.....
சரணம் சரணம் ஐயப்பா....
பக்தியுடனே அவன் புகழை..
உருகிட ததுகிடத்தோம் பாடி.....
சபரி கிரியை தான் தேடி .....
வந்தோம் சரணம் ஐயப்பா......
நாங்கள் வந்தோம் சரணம் ஐயப்பா....
ஓம் சாமியே சரணம் ஐயப்பா......
ஐயப்பா.....பா...பா....
ஓம் சாமியே சரணம் ஐயப்பா.....
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)