மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!
Mar 16, 2026,10:32 AM IST
மதுரை: மதுரை அரசரடி தமிழ்த் தென்றல் 3-வது தெருவில் நடைபெறும் முறையற்ற சாலைப் பணிகளால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இப்பகுதியின் திமுக கவுன்சிலரின் தந்தை கருப்பையா, அதிகாரப் பொறுப்பில் இல்லாத போதும், தனது மகனின் செல்வாக்கைப் பயன்படுத்தி சாலைப் பணிகளைத் தன் வசம் எடுத்துக்கொண்டு தரமற்ற முறையில் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஓரளவு நன்றாக இருந்த சாலையில் உள்ள சிமெண்ட் செங்கல் கற்களை அகற்றி ஆங்காங்கே வேறொரு இடத்தில் அடுக்கி வைத்து சேதப்படுத்திய அந்தச் சாலையில் ஜல்லிக்கற்களை நிரப்பி அதன் மேல் ஏற்கனவே அகற்றி அடுக்கி வைத்த அதே பழைய சிமெண்ட் கற்களைக் கொட்டிவிட்டு சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் ஏனோ தானோ என்று அறைகுறை வேலை பார்த்து வருகிறார்.
பழைய கற்களைக் கொண்டே 'ஏனோ தானோ' எனச் செய்யப்படும் இந்த வேலையினால், முன்பு இருந்த சாலையைவிட இந்தச் சாலை இப்போது மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகப் பணிக்குச் செல்வோர்கள் வயதானவர்கள் வரை பலரும் குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.