Creative writers: அரசுப் பள்ளி மாணவிகளின் இலக்கிய சாதனை!

Su.tha Arivalagan
May 27, 2026,03:42 PM IST

- வே.ஜெயந்தி


செங்கல்பட்டு மாவட்டம் கொங்கனாஞ்சேரியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.


இப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் வே. ஜெயந்தி அவர்களின் ஊக்கத்தால், எட்டு மாணவிகள் ஆங்கிலக் கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளனர். பள்ளி வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற இந்த சாதனை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.




இந்த புத்தக வெளியீட்டு விழா “Creative Writers Spark Award 2K26” நிகழ்வில், 23.05.2026 அன்று திருச்சி ராஜராஜேஸ்வரி மினி மஹாலில் நடைபெற்றது. கல்வித்துறை இணை இயக்குநர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளையும் ஆசிரியரையும் கௌரவித்தார்.


மேலும், ஆசிரியர் வே. ஜெயந்தி அவர்கள் எழுதிய “Poem Born from Belief” என்ற ஆங்கிலக் கவிதைப் புத்தகமும் வெளியிடப்பட்டு, அவருக்கு “Creative Writer Spark Award” வழங்கப்பட்டது. ஆன்லைன் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்காகவும் அவர் மேடையில் பாராட்டப்பட்டார்.




அரசுப் பள்ளி மாணவர்களின் இலக்கிய திறமையை வெளிக்கொணர்ந்த இந்த நிகழ்வு கல்வி வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மேலும், எங்கள் அனைவரையும் வழிநடத்தி ஊக்கமளித்து வரும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கும், வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் இந்த இனிய தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


பிருந்தா மேடம் அவர்கள்  Creative Writer Group founder எங்கள் நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.


(V. JAYANTHI, Graduate teacher, Creative Writer, PUMS Konganancherry, Chengalpattu district)